செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (18:45 IST)

எம்ஜிஆருக்கு மீண்டும் ஜோடியாகும் ஜெயலலிதா

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு  என்ற அனிமேஷன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளார்  ஜெயலலிதா.
 
எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை அடுத்து அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் படமாக்க திட்டமிட்டிருந்த படம் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ. ஆனால் எம்ஜிஆர் தமிழக முதல்வர் ஆகிவிட்டதால் இந்த படம் எம்ஜிஆரின் நிறைவேறாத கனவாகிவிட்டது.
 
இதனால் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமான நகைச்சுவை நடிகரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரிவேலனின் மகன் ஐசரிகணேஷ் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' அந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷனில் எம்ஜிஆரின் காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
 
இந்நிலையில்,  இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மீண்டும்  ஜெயலலிதா நடிக்கிறார். இவர்கள் ஏற்கனவே 28 படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.