திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (13:51 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.. நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு என சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து ழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர்  செந்தில் பாலாஜியின் காவல் 8வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி   சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இந்த மனு மீதான விசாரணை மீண்டும் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.


Edited by Mahendran