1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (19:40 IST)

சிறுவர்களை மதமாற்ற முயற்சி.. இளைஞர்களுக்கு அடி உதை.. பரபரப்பு செய்திகள்

சிறுவர்களை மதமாற்ற, செய்ய சிலர் முயன்றுள்ளனர். அதை தடுக்க வந்த வாலிபர்களை ஆலயத்தில் பெயரைச் சொல்லி அவர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி - திண்டுக்கல் சாலையில்  அருகே உள்ளது ஒரு மாந்தோப்பு. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். 
 
இந்தப் பகுதிக்கு தினமும் ஒரு வேன் வரும். அங்குள்ள சிறுவர்களை ஏற்றிக்கொண்டு ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு  போனதாக தெரிகிறது.
 
இது தொடர்பாக,  அங்குள்ளவர்கள் வேன் டிரைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவார்கள் பொது அறிவு கற்றுத்தர அழைத்துச்செல்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஆலயத்துக்கு அழைத்துச் சென்ற ஒரு மாணவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தனர். ஆலயத்தில் முழங்கால் போட்டு ஜெபிக்க சொன்னதாகக் கூறியுள்ளனர்.
 
பின்னர் மீண்டும் குழந்தைகளை அழைத்துப் போக வேனில் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அதற்கு பெற்றோர் மறுத்துள்ளனர்.
 
அன்று இரவு , குழந்தைகளை வரவிடாமல் தடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 3 பேரை சர்ச் ஆட்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுசம்பந்தமாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.