1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:55 IST)

அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் மாதம் ரூ.8 லட்சம்: முதல்வர் அறிவிப்பு..!

Social Media Day
அரசின் சாதனைகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேசம் மாநில அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை சமூக வலைதளங்களான எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஃபாலோயர்களை பொறுத்து சம்பளம் வழங்கப்படும் என்றும் உத்தரபிரதேசம் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாலோயர்கள் அடிப்படையில் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என சம்பளம் வழங்கப்படும்

அதேபோல் யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பதிவு செய்யலாம் என்றும், சப்ஸ்கிரைபர்கள் அடிப்படையில் ரூ.4 லட்சம் ரூ.6 லட்சம் ரூ.7 லட்சம் ரூ.8 லட்சம் என சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 உபி மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran