செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (14:32 IST)

திவாகரன் ஆதரவை வரவேற்ற திமுக எம்.பி

நீட் தேர்வுக்கு எதிராக திமுக செயல்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த திவாகரனை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.


 

 
கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வு விவகாரத்தால் அனிதா உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். 
 
திமுக கடந்த திங்கட்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வரும் 8ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார்.
 
திவகாரனின் ஆதரவை வரவேற்பதாக கூறிய திருச்சி சிவா, நீதிமன்றத்திலும் மத்திய அரசிடமும் தமிழக அரசு நியாயமாக போராடாததே அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.