2026 சட்டமன்ற தேர்தல் முடிவு!.. தபால் வாக்கில் கே.என்.நேரு பின்னடைவு..
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவுகளில் பொதுமக்கள் வாக்களித்தனர். 5.85 கோடி வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் 85 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது துவங்கியது. வழக்கம்போல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில், திமுக முதலிடத்தில் இருக்கிறது. தற்போதுவரை, 31 தொகுதிகளில் திமுக 15 இடங்களிலும், தவெக 9 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
தபால் வாக்கில் அமைச்சர் நேருவின் தொகுதியான திருச்சி மேற்கில் தவெக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். சுமார் 4 ஆயிரத்திற்கு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின்னடைவை சந்தித்தித்துள்ளார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.ம யிலாப்பூரில் தமிழிசை சவுந்தர்ராஜனும், சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியனும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
234 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியான பின்னரே வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.