1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (15:42 IST)

நோயை கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலி: திருச்சி இளைஞர் சாதனை..!

ஏற்கனவே நோய்களை கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் இருப்பது போல் தற்போது நோய்களை கண்டறிய ஸ்மார்ட் நாற்காலி ஒன்றிய திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுபாஷ் என்பவர் ஒரு ஸ்மார்ட் நாற்காலியை கண்டுபிடித்து உள்ளார். இந்த நாற்காலியில் நோயாளிகள் அமர்ந்தால் மட்டும் போதும், எந்த விதமான பரிசோதனையும் செய்யாமல் அவர்களுக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த மாணவர் கூறியுள்ளார். 
 
கொரோனா போன்ற தொற்று நோய் ஏற்பட்டபோது, மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகள் அருகில் செய்யாமலேயே சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசித்ததாகவும் அந்த யோசிப்பின் விளைவு தான் இந்த ஸ்மார்ட் நாற்காலி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஸ்மார்ட் நாற்காலியில் நோயாளி உட்கார்ந்தால் உடனே அவரது உடலில் உள்ள குறைகள் குறித்து மானிட்டரில் தெரியவரும் என்றும் அதனை வைத்து அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் அந்த மாணவர் விளக்கி உள்ளார்
 
Edited by Siva