வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (12:19 IST)

விஜயகாந்தின் நினைவிடத்தில் சரத்குமார் அஞ்சலி..!!

sarathkumar
மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில்  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்.
 
 
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு கொண்டுவரப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 
 
இதன் பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும், சென்னை தீவுத்திடலிலும் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டிசம்பர் 29ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைமை கழகத்திற்கு நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.