1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 4 மே 2017 (19:57 IST)

போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பேருந்துகள் இயங்குமா?

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


 

 
போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம், ஊழியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 
 
அதன்பின், 55 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இன்று, குரோம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. எனவே, வருகிறது 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசு பேருந்து இயக்கம் தடை படும் எனத் தெரிகிறது.