வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (06:49 IST)

போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: எந்த தேதி வரை செலுத்தலாம்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் தற்போது போக்குவரத்து வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இதையும் நீட்டித்துள்ளது
 
போக்குவரத்து வாகன வரி செலுத்த கடைசி தினம் மே 15 என்று இருந்த நிலையில் தற்போது ஜூன் 30 என நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கூறப்பட்டுள்ளதாவது:
 
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த மே 9 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது
 
அந்த கூட்டத்தின் போது தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கு ஜூன் 30ஆம் தேதிக்கான காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதம் இல்லாமல் செலுத்துவதற்கு கடைசி தேதியான மே 15 என்று இருந்ததை ஜூன் 30 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது