செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:39 IST)

இரவு நேர ஊடரங்கு… போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு இவ்வளவா?

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இரு தினங்களாக அமலில் உள்ளது. அதனால் இரவு 10 மணி முதல் 4 வரை தமிழகத்தின் பெரும்பாலான இயக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்துக் கழகமும் அடக்கம். இதனால் நாள் ஒன்றுக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 12 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.