1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 மே 2024 (09:13 IST)

அரசு பேருந்துகளுக்கு தொடர்ந்து அபராதம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்..!

அரசு பேருந்துகளுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து வருவதை அடுத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்தில் பயணம் செய்த போது டிக்கெட் எடுக்க மறுத்ததை அடுத்து வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. 
 
இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு அபராதம் எதிர்த்து வருகின்றனர். சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசு பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்து வருவது காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் முதலில் தென் மாவட்டங்களில் மட்டுமே அபராதம் மிதிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக முழுவதும் தொடர்ந்து அரசு பேருந்து குறிவைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளனர் 
 
ஏஐடியுசி, சிஐடியு, ஏடிபி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விதிமுறைகளை மீறியதாகக் கூறி அரசு பேருந்துகளுக்கு போலீஸார் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran