1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 23 மே 2024 (14:46 IST)

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

Police Vechicle
உத்தராகண்டில் பாலியல் புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்ய காவல்துறை வாகனத்தை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வரை போலீசார் ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பெண் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இதே மருத்துவமனையில் நர்சிங் அலுவலராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். பெண் பயிற்சி மருத்துவர்களை சதீஷ்குமார் பாலியல் ரீதியாக கடந்து சில நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக அந்தப் பெண் மருத்துவரை தவறான நோக்கத்தோடு சதீஷ்குமார் சீண்டியதாகவும், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக  பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மிட்டல் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சதீஷ்குமார் பெண் பயிற்சி மருத்துவரிடம் பாலியல் ரீதியில் தொல்லைத் தந்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. 
 
இந்நிலையில் சதீஷ்குமாரை உத்தராகண்ட் போலீஸார் கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது நடவடிக்கையின் போது, சதீஷ்குமார் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதை அறிந்த போலீசார்,  அவரை கைது செய்வதற்காக காவல்துறை வாகனத்தை மருத்துவமனை கட்டிடத்திற்கு உள்ளையே ஓட்டி சென்றனர்.


அங்கிருந்த நோயாளிகளின் படுக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு, காவல்துறை வாகனத்தை  ஓட்டி சென்று சதீஷ்குமாரை கைது செய்தனர். இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகத்திற்குள் காவல்துறை வாகனம் செல்லும் காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.