புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2022 (08:06 IST)

ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது: பரபரப்பு தகவல்

police beat
ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது: பரபரப்பு தகவல்
கோவையை சேர்ந்த ஸ்விக்கி உணவு டெலிவரி பணி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் தாக்கியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கோவை நீலம்பூர் என்ற பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதை அடுத்து அந்த வழியாக சென்ற ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணை இடித்தது தொடர்பாக தட்டி கேட்டார்.
 
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலர் சதீஷ், மோகனசுந்தரரை அடித்துள்ளார். பெண்ணை இடித்த பள்ளி வாகனம் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவருடைய செல்போனையும் காவலர் சதீஷ் பிடுங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
 
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் மோகனசுந்தரம் புகார் அளித்ததை அடுத்து போக்குவரத்து காவலர் சதீஷ், பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.