1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (18:00 IST)

தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு பேருந்துகளில் உறுதி தன்மையை கவனிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பேருந்துகளின் மேற்கூரை, படிக்கட்டுகளை கண்காணித்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு பேருந்துகளில் பிரேக், கிளட்ச் உள்ளிட்ட அம்சங்களை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணிமனைகளில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு குறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த  சில வாரங்களாக அரசு பேருந்துகளில் மழை நீர் கசிவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளதால் அதை தவிர்க்கும் வகையில்  சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran