முன்னாள் காதலன் மீது திருநங்கை காவல் அதிகாரி புகார்....

Last Modified செவ்வாய், 10 ஜூலை 2018 (13:35 IST)
தனது முன்னாள் காதலன் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை காவல் அதிகாரி பிரித்திகா யாசினி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தியாவின் முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டவர் பிரித்திகா யாசினி. இவர் தற்போது சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
 
அதில், அவரின் முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தனன் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார். முகநூல் மூலம் பழக்கமான ஜனார்த்தனனுடன் முதலில் நட்பாக பழகியுள்ளார் பிரித்திகா. அதன் பின் நட்பு காதலாக மாறியது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரித்திகா பிரிந்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் பிரித்திகாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். 
 
எனவே, அவரை வரவழைத்த போலீசார், பிரித்திகாவிற்கு இனிமேல் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டேன் என எழுதி வாங்கி விட்டு, அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :