வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (11:10 IST)

சென்னையில் இன்று ரயில்கள் ரத்து!!

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மதியம் வரை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான பகுதிகளில் ரெயில்வே ஊழியர்கள் பரமாரிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில்கள், இன்று மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.

இதே போல சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளிலும் ரயில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், இருமார்க்கத்திலும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.