வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (15:14 IST)

ரயில் பெட்டி தீ விபத்து : தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

madurai rail accident
உத்தரபிரதேசம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்த  சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

பல்வேறு கோயில்களுக்குச் சென்றறுவிட்டு, இன்று அதிகாலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பயணிகள் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்திற்கு, சட்டவிரோதமமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என்று  தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது தென்னக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இவ்விபத்து தொடர்பாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ போலீஸாருக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேலும் சில தகவல்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.