1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (09:11 IST)

ரயிலில் சிலிண்டர் வைத்து சமையல் செய்த பயணிகள்.. மிகப்பெரிய விபத்து.. 9 பேர் பலி..!

ரயிலில் சிலிண்டர் வைத்து சமையல் செய்த பயணிகள்.. மிகப்பெரிய விபத்து.. 9 பேர் பலி..!
ரயிலில் சிலிண்டர் வைத்து சமையல் செய்த போது சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான பரிதாபமான சம்பவம் லக்னோவில் நடந்துள்ளதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
லக்னோவில் இருந்து ரயிலில் சுற்றுலா வந்தவர்கள் தடையை மீறி கேஸ் சிலிண்டரை வைத்து ரயில் உள்ளேயே சமையல் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் கொள்ளையர் பயம் அதிகமாக இருந்ததால் ரயில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டியுள்ளனர். 
 
அப்போதுதான் திடீரென சிலிண்டர்  இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்த தீயில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் ஒன்பது பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
 
இது குறித்து முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வைத்து ரயிலின் உள்ளே சமையல் செய்ததுதான் விபத்துக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran