1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:30 IST)

சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அதுகுறித்து விசாரணை செய்ய சமீபத்தில் தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தது
 
அந்த கமிஷன் தற்போது விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை குறித்து தமிழக கவர்னர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 
 
பல்கலை. மானிய குழு விதிகளுக்கு எதிராக துணைவேந்தராக சூரப்பா நியமனம் என மனுவில் டிராபிக்  ராமசாமி குறிப்பிட்டிருந்தாலும், அதற்ரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என கூறி டிராபிக் ராமசாமி மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் செய்ய கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது