1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 29 மே 2017 (19:14 IST)

ரஜினிக்கு அரசியல் வேண்டாம் - டிராபிக் ராமசாமி அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. ஒரு பக்கம் பாஜக தங்கள் கட்சிக்கு ரஜினியை அழைத்து வந்தாலும் ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதையே ரஜினியை சுற்றியிருப்பவர்கள் நினைக்கிறார்கள்.
 
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த டிராபிக் ராமசாமி “ரஜினிகாந்த் தைரியமான நபராக இருந்திருந்தால், அவர் எப்போதோ அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவர் சினிமாவில் மட்டும் நடிக்கட்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது” என அவர் தெரிவித்தார்.