வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:19 IST)

பேப்பர திறந்தாலே கிசுகிசுதான் படிப்பேன்… கலைஞர் சொன்ன ரகசியம்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் தீவிர வாசிப்பாளராக இருந்து வந்தார்.

கலைஞர் கருணாநிதி 95 வயது வரை வாழ்ந்த நிலையில் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்து மற்றும் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தினமும் எல்லா தினசரிகளையும் படிக்கும் வழக்கம் கொண்டவர் கலைஞர்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் பி ஆர் ஓ வுமான விஜய் முரளி கலைஞரின் வாசிப்புப் பழக்கம் பற்றி ஒரு ரகசியம் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் கலைஞரிடம் நான் நீங்கள் தினசரியில் முதலில் எதைப் படிப்பீர்கள் எனக் கேட்டேன். அப்போது ‘அவர் சினிமா கிசுகிசுக்களைதான் முதலில் படிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.