1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (09:50 IST)

இனி சரக்கு பார்ட்டியோட உக்காந்து வந்தாலும் அபராதம்! – சென்னை போக்குவரத்து காவல்!

Traffic
சென்னையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுபவரோடு அமர்ந்து பயணிப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தொடங்கி சிற்றூர்கள் வரையிலுமே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது பல பகுதிகளில் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என ட்ராபிக் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு அபராதம் உள்ளிட்டவற்றையும் விதித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இதுவரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி அவ்வாறு மது அருந்தி வாகனம் ஓட்டுபவருடன் சேர்ந்து பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் பயணிப்பவர்கள் மது அருந்தியிருந்தாலும், அருந்தியிருக்காவிட்டாலும் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K