வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (15:07 IST)

ஆதாரம் இல்லாம வீடியோ போட்டால் கடும் நடவடிக்கை! – யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

யூட்யூப் சேனல்கள் அதிகரித்துவிட்ட நிலையில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில் புற்றீசல் போல பல யூட்யூப் சேனல்கள் தினம்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறாக உருவாகும் பல யூட்யூப் சேனல்களில் ப்ராங்க் என்ற பெயரில் பிறரை தொல்லை செய்வது, அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக ஆதாரமற்ற தகவல்களை தருவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன.


இதுகுறித்த வழக்கு ஒன்றில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ”மலிவான விளம்பரத்திற்காக யூட்யூப் சேனல்கள் ஆதாரமற்ற கருத்துகளை மக்களிடையே பரப்புகின்றன. இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

எனவே, எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இழிவான கருத்துகள், தகவல்கள் மற்றும் நேர்க்காணல்களை வெளியிடும் யூட்யூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K