1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (08:53 IST)

சென்னை பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்?

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மெட்ரோ பணிகள் காரணமாக பரங்கிமலை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை பகுதியில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்ல வேண்டும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி இல்லை.

அதேபோல் ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையில் செல்வதற்கு வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ செல்லலாம். வாகன ஓட்டிகள்,  பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு போக்குவரத்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

Edited by Siva