1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 மே 2023 (17:32 IST)

ரூ.535 கோடி பணத்தை எடுத்து சென்ற ரிசர்வ் வங்கி வாகனம் திடீர் பழுது.. தாம்பரம் அருகே பரபரப்பு..!

ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரம் மாவட்ட வங்கிகளுக்கு ரூ.535 கோடி பணம் எடுத்துச் சென்ற வாகனம் திடீரென தாம்பரம் அருகே நடு ரோட்டில் பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ரிசர்வ் வங்கி அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வங்கிகளுக்கு பணத்தை வாகனம் மூலம் அனுப்பி வைக்கும் என்பதும் மிகுந்த பாதுகாப்புடன் அந்த வாகனம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு ரூ.535 கோடி பணம் அனுப்பப்பட்டது. மிகுந்த பாதுகாப்புடன் சென்ற அந்த வாகனம் திடீரென தாம்பரம் அருகே பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வாகனம் தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva