திமுக எம்பி டி.ஆர்.பாலு டிஸ்சார்ஜ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

balu
திமுக எம்பி டி.ஆர்.பாலு டிஸ்சார்ஜ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்
siva| Last Updated: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (16:00 IST)
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமாகி விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திமுக பொருளாளரும் எம்பியுமான டிஆர் பாலு அவர்கள் மருத்துவமனையில் இருந்து சற்று முன் வீடு திரும்பியுள்ளதாகவும், கொரோனாவின் தீவிரம் குறைந்ததை அடுத்து அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டில் சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டிஆர் பாலு அவர்கள் தாம்பரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :