புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:03 IST)

உன் பொண்டாட்டி நல்லவ அவள ஹேப்பியா வச்சிக்கோ - கணவரை வாழ்த்திய ஸ்ரேயா சரண்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் , வீடியோக்களை வெளியிடுவார்.
 
இந்நிலையில் தற்ப்போது கணவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறி திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரேயா சரண்,  " உன் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள். ஏனென்றால் அவள் மிகவும் சரியானவள் லவ் யூ ஆல்வேஸ்" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.