1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:15 IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

courtralam
குற்றாலம் அருவியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பகுதியை சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர் 
 
இந்த நிலையில் தற்போது மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
சபரிமலை செல்லும் பக்தர்கள் குற்றாலம் சென்று குளித்து விட்டு தான் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் 
 
இந்நிலையில் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva