கனமழையால் நாளை பள்ளிகள் விடுமுறை.. முதன்மை கல்வி அலுவலகம் அறிவிப்பு..!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வரும் நிலையில் நாளை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி நாளை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரியை தொடர்ந்து வேறு சில மாவட்டங்களுக்கும் விடுமுறை விடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Edited by Siva