1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (07:45 IST)

கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  
 
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.  இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva