ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு. அந்த நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளைய விடுமுறையை சரிகட்டும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran