1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Forest department give permission to sathuragiri temple

ஆடி மாத அமாவாசை.. சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

sathuragiri
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மிகப்பெரிய அளவில் விசேஷமாக இருக்கும் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் ஆடி மாத அமாவாசை ஜூலை 17ஆம் தேதி வர இருக்கும் நிலையில்  நாளை முதல் ஜூலை 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 
 
நாளை முதல் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேறி கொள்ளலாம் என்றும் இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் உதவிகள் வந்து சேரும்! இன்றைய ராசிபலன் (14-07-2023)!