கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: கமல் கட்சிக்கு அழைப்பு இல்லையா?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
கொரோனா வைரஸ் தடுப்பூசி வாங்குவதற்கு சர்வதேச அளவிலான டெண்டர் கோரப்படும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளது மத்திய அரசு அதிர்ச்சி அடையச் செய்து உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய நாளை அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்ட இருக்கிறார். இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு என்பதால் கமல்ஹாசன் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது