திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 12 மே 2021 (17:18 IST)

90ஸ் கிட்ஸின் ‘’சக்திமான்’’ ஹீரோவுக்கு கொரோனா?.. முகேஷ் கண்ணா வீடியோ வெளியீடு

''சக்திமான்'' புகழ் நடிகர் முகேஷ் கண்ணாவுக்கு கொரொனா என்ற வதந்திகள் பரவிய நிலையில் தற்போது அவரே விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் 90ஸ் கிட்ஸின் ஆஸ்தான ஹீரோவாக கருதப்படும் சக்திமான் தொடரை இயக்கி நடித்து உலகளவில் புகழ்பெற்ற நடிகர் முகேஷ் கண்ணா தான் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நடிகர் முகேஷ் கண்ணாவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை எத்துவருவதாகத் தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் முகேஷ் கண்ணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், என்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம்  அளிக்கிறேன். எனக்குக் கொரொனா தொற்றில்லை,. நான் நலனுடம் ஆரோக்கியமுடனும் உள்ளேன். என் நலம்விரும்பிகள், நண்பர்கள் தொடர்ந்து என்னிடம் போனில் விசாரித்த வண்ணமுள்ளனர். எனக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.