வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 12 மே 2021 (21:50 IST)

ரூ.1 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த சூர்யா-கார்த்தி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கொரோனா தடுப்பு நிதியாக பொதுமக்கள் தாராளமாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து இன்று நடிகர்கள் சூர்யா கார்த்தி இணைந்து ரூபாய் ஒரு கோடி வழங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதும் நடிகர் சிவகுமார் குடும்பத்திலிருந்து சூர்யா கார்த்தி ஆகியோர்கள் தான் முதல் முதலாக கொரோனா தடுப்பு நிதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டும் முதல்வரை கேட்டுக் கொண்டதையடுத்து அடுத்த நாளே ஒரு கோடி என்ற மிகப் பெரிய தொகையை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே நேற்றிலிருந்து தொழிலதிபர்கள் பலரும் தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பு நிதி வழங்கி வரும் நிலையில் திரையுலகிலிருந்து சூர்யா கார்த்தி தற்போது நிதியை ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து ரஜினி, கமல், அஜித், விஜய், ராகவா லாரன்ஸ் உள்பட அனைத்து நட்சத்திரங்களும் தாராளமாக தமிழக அரசுக்கு நிதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது