1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (19:07 IST)

நாளை 50,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளை 50,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை தமிழகத்தில் 50 ஆயிரம் மையங்களில் ஆறாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி மையம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே ஒரு சில மாவட்டங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி முகாம்களை பார்வையிட போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.