சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ்… கண்டிப்பா இந்த ஆண்டு இல்லை!
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சொல்லப்பட்டது.
இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது ரிலிஸாக உள்ளது. பேன் இந்தியா படமாக வரும் புஷ்பா தமிழ்நாட்டிலும் கணிசமான திரையரங்கிலும் வெளியாகும் எனத் தெரிகிறது. அதே நாளில் தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் வெளியாகும் என ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப் பட வேண்டி உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கு சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. அதனால் குறுகிய இடைவெளியில் இன்னொரு படம் வெளியானால் பெரிய எதிர்பார்ப்பு இருக்காது என்பதால் அடுத்த ஆண்டுதான் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.