200 ரூபாயை நெருங்கியது ஒரு கிலோ தக்காளி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் கடந்த 3 நாட்களாக 100 ரூபாய்க்கும் அதிகமாக ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மாலை 150 ரூபாயை தக்காளி விலை தாண்டிவிட்ட நிலையில் நாளை அனேகமாக 200 ரூபாயை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தக்காளி சாகுபடி குறைவாக உள்ளது என்பதும் மிக குறைவாகவே தக்காளி வரத்து மார்க்கெட்டில் இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்குவதால் விலை ஏறிக்கொண்டே போகிறது என்று கூறப்படுகிறது
நாளை அல்லது நாளை மறுநாள் தக்காளியின் விலை 200ரூபாயை தொடலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.