வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 10 மே 2022 (12:36 IST)

ரூ.700 - ரூ.800 வரை விற்கப்படும் தக்காளி - மக்கள் அதிர்ச்சி!

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. ஆனால் கடந்த மாதம் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. விவசாயிகள் பலரும் தக்காளி பயிர் செய்திருந்த நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தது. இந்நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 
 
ஆம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரள நகரங்களுக்கு காய்கறி தினமும் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. 
 
கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டது. வரத்து குறைவால் நேற்று ஒரு பெட்டி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. இதனால் சில்லரை கடைகளில் விற்கப்படும் தக்காளியின் விலையும் உயர்ந்துள்ளது.