இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா? விடுதலைக்கு பின் என்ன திட்டம்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வந்த நிலையில் இன்றுடன் அவர் தண்டனை முடிவடைகிறது
இதனை அடுத்து அவர் இன்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து விடுதலையாவதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என்றாலும் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்வார் என தகவல் வெளிவந்துள்ளது
மேலும் முழுமையாக குணமடைந்த பிறகு தான் அவர் தமிழகம் வருவார் என்றும் அதன்பின் அவர் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்த தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
சசிகலா இன்று விடுதலை ஆகிறார் என்ற தகவல் அதிமுகவினரிடையேயும், தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது