1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu

3 மணி நேரத்தில் 9 மாவட்டகளில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தென்கிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
Netflix 1M Lose – மீட்க வருமா மைக்ரோசாப்ட்??