திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (07:51 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
கடந்த 268 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 269 நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனை ஆகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் கடந்த 9 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்றாலும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அந்த பயனை மக்களுக்கு அளிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 
 
ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva