1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate at chennai

226வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 225 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
 ஏழு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந் தாலும் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பணமதிப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு