145 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?
சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் கடந்த 145 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.4 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் பெட்ரோல் விலை உயராமல் இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகம் இருப்பதாகவும் அந்த வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva