முதன்முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலை: பட்டாசு விற்பனை சங்கம் முடிவு
முதல் முறையாக சென்னை தீவுத்திடலில் அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படும் என்றும் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரியான விலையில் விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் முதல் முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது
சென்னை தீவுத்திடலில் 114 பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் கடைகளை அமைக்க இருப்பதாகவும் அனைத்து கடைகளிலும் கூட்டுறவு முறைப்படி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்த பட்டாசு விற்பனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 16ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran