செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (08:41 IST)

தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு!

தமிழகத்தில் கட்டுமான பொருட்களான எம் சாண்ட், சிமெண்ட், இரும்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து வருகிறது.
 
கடந்த ஜூன் மாதத்தில் 490 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை கடந்த செப்டம்பர் மாதம் 420 ரூபாயாக குறைந்தது. மேலும் அரசு டான்செம் நிறுவனம் மூலம் வலிமை சிமெண்ட் வர உள்ளதால் அந்த சிமெண்ட் தமிழக சந்தைக்கு வரும் போது சிமெண்ட் விலை மேலும் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் இதற்கு மாறாக கட்டுமான பொருட்களான எம் சாண்ட், சிமெண்ட், இரும்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து வருகிறது. சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.60 வரையும், ஸ்டீல் விலை ரூ.12 ஆயிரம் வரையும் உயர்த்தியுள்ளனர். 
 
மேலும் எம் சாண்ட் ரூ.12,500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.15,200 ஆகவும்,
பி சாண்ட் ரூ.15,500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.17,200 ஆகவும், 
சிமெண்ட் ரூ.380 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.470 ஆகவும், 
ஸ்டீல் டன் ஒன்றுக்கு ரூ.55,000 இருந்த நிலையில் தற்போது ரூ.69,000 ஆகவும், 
செங்கல் 1 லோடு ரூ.29,250 இருந்த நிலையில் தற்போது ரூ.42,750 ஆகவும்,
எலக்ட்ரிக்கல் கேபில் 180 மீட்டர் ரூ.4397ல் இருந்த நிலையில் தற்போது ரூ.6387 ஆகவும் உள்ளது.