1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (07:24 IST)

20 நாட்களுக்கு பின் விலையேற்றம்: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

கடந்த 20 நாட்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் இன்று திடீரென்று டீசல் விலை மட்டும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 
 
இன்றைய சென்னை மற்றும் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ. 98.96. சென்னையில் டீசல் விலை ரூ.93.46 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.