வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (07:15 IST)

விடிய விடிய கனமழை: மிதக்கும் தலைநகர் டெல்லி!

டெல்லியில் நேற்று மாலை முதல் தற்போது வரை கனமழை பெய்து வருவதால் காரணமாக டெல்லியில் உள்ள பல பகுதிகள் வெள்ள நீரால் மிதந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லியில் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. அந்த மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அக்பர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பலநூறு வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து இருப்பதாகவும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் டெல்லி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.