வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (07:19 IST)

100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை, 90ஐ தாண்டியது டீசல் விலை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் முதல் முறையாக டீசல் விலையும் 90 தாண்டி உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்தாலும் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பெட்ரோல் மட்டுமே ரூபாய் 90ஐ தாண்டி விற்பனை செய்து கொண்டிருக்கையில் இன்று முதல் டீசல் விலையும் 90 விட அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பெட்ரோல் விலையும் 96 ரூபாய் வரை வந்து விட்ட நிலையில் மிக விரைவில் 100ஐ எட்டிவிடும் என அஞ்சப்படுகிறது. இன்றைய சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 23 காசுகள் உயர்ந்து 95.99 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. சென்னையில் டீசல் விலை 22 காசுகள் உயர்ந்து 90.12 ரூபாய் என விற்பனையாகி வருகிறது